சவுதியில் மீனவர் உயிரிழப்பு – சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது காரசார விவாதம்!

தமிழர்கள் மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்..

தமிழக சட்டசபையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, கூட்டுறவு ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் தொடங்கியது. பேரவை தொடங்கியதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசியவர், சவுதியில் தங்கி மீன் பிடித்த தமிழர்களை, ஈரானிய கடற்கொள்ளையர்கள் தமிழர்களை தாக்கி உள்ளார்கள். தமிழக மீனவர்கள் ஆந்திரா கடலோரம் மீன்பிடிக்க சென்ற பொழுது எட்டு விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களை விடுவிக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

அமைச்சர் – ஆதவ் :

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து,புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால், உயிரிழந்த மீனவர்களின் உடல் தமிழகத்திற்கு அனுப்புவது காலத் தாமதம் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் உயிரிழந்த உடல் தமிழகத்திற்கு கொண்டுவர மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

மைச்சர் – விஸ்வநாதன்:

மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்துவது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது . தொடர் நடந்து வரும் போராட்டத்தில் ஒழுங்குமுறை செயல்படுத்த வேண்டுமென உயர் கல்வி துறை மூலம் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டது. தொடர் போராட்டம் எதிரொலியாக ஒழுங்கு அமைதி கடிதம் கல்லூரிகளுக்கு அனுப்பும் தேவை ஏற்பட்டது , அதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டது

இந்த சுற்றறிக்கையில் தவறான வார்த்தைகள் மற்றும் குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகள் பற்றி குறிப்பிட்டிருந்தது. அந்த வாசகங்களை இடம் பெற்று இருந்ததை அறிந்த, கல்லூரி இயக்குனரகம் , அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகளை திரும்ப பெறப்பட்டது . இந்த சுற்றறிக்கை எவ்வித உள்நோக்கமும் இன்றி, முற்றிலும் கல்வி நிறுவனங்களின் ஒழுங்கு அமைதி பாதுகாக்க, நோக்கத்தின் உள்ளடங்கியது

இந்த அரசின் அனைத்து மாணவர்களின் உரிமைகளோ, இளைஞர்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் நோக்கம் இல்லை.மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நியாயமான உரிமைகளை மதிக்கும் அரசாக இந்த அரசு உள்ளது என்றார்.

அமைச்சர் – விஸ்வநாதன் :

போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடக்கூடாது என கல்வி இயக்குனரகம், கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு திரும்ப பெறப்பட்ட நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் விளக்கம் கொடுத்துள்ளார்.

திமுக செழியன்:

அம்பேத்கர் அயலக, உயர்கல்வி திட்டத்தில், வெளிநாட்டில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை முறையாக வழங்கப்படுகிறதா.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.