மேலூர் அருகே நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியைக்கு மேளதாளம் முழங்க சீர்வரிசையுடன் கிராம மக்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சருகுவலையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்
தலைமையாசிரியராக கடந்த 9 ஆண்டுகளாக பணியாற்றி வரும் உமாமகேஸ்வரி தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்றார்.
இந்நிலையில், நல்லாசிரியர் விருது பெற்ற பின் நேற்று பள்ளிக்கு சென்ற தலைமையாசிரியை உமா மகேஸ்வரிக்கு, கிராம மக்கள் ஒன்றுகூடி பேண்ட் இசை
வாத்தியங்கள் முழங்க, பழம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கி மலர் தூவி
உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் பள்ளியின் மாணவ, மாணவிகளும் தலைமையாசிரியை உமா மகேஸ்வரிக்கு மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ரெ. வீரம்மாதேவி







