கூடலூர் அருகே குடியிருப்புப் பகுதிகளில் உலா வரும் ஒற்றைக் காட்டு யானை – பொதுமக்கள் பீதி!

கூடலூர் அருகே தேவாலா பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே உலா வரும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள், தேயிலை…

கூடலூர் அருகே தேவாலா பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே உலா
வரும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள், தேயிலை
தோட்டங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் இந்த வனப் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன.
குறிப்பாக வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் தேயிலைத்
தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளின் அருகே உலா வருவது மட்டுமல்லாமல் விளை
நிலங்களை சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்கும் செயல்களில் ஈடுபடுகின்றன.

இந்நிலையில் தேவாலா பகுதியில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய
ஒற்றை காட்டு யானை காவல் நிலையம் குடியிருப்பு அருகே உலா வந்தும் குடியிருப்பு
பகுதியில் நீண்ட நேரமாக முகாமிட்டு இருந்தது. இந்நிலையில் குடியிருப்பு
பகுதியில் நீண்ட நேரமாக முகாமிட்டிருந்த காட்டு யானையை கண்ட பொதுமக்கள் யாரும் குடியிருப்பை விட்டு வெளியே வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேலும் காட்டு யானை குடியிருப்பு பகுதியில் உலா வருவதை அப்பகுதியில் வசிக்கும்
குடியிருப்பு வாசிகள் அச்சத்துடன் வீடியோ பதிவு செய்துள்ளனர். இதனால்
குடியிருப்புகளின் அருகே முகாமிட்டு உலா வரும் ஒற்றைகாட்டு யானையின்
நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி
மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெ.வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.