மெகபூப முப்தி பாஸ்போர்ட் நிராகரிப்பு!

பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூப முப்தியின் பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெகபூப முப்தி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் அதில், “பாஸ்போர்ட் அலுவலகம் எனக்கு பாஸ்போர்ட்…

பாதுகாப்பு அம்சங்கள் காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூப முப்தியின் பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெகபூப முப்தி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் அதில், “பாஸ்போர்ட் அலுவலகம் எனக்கு பாஸ்போர்ட் வழங்குவதை நிராகரித்துள்ளது. எனக்கு பாஸ்போர்ட் வழங்குவதால் ‘இந்தியாவின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்ககூடும்’ என பாஸ்போர்ட அலுவலகம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. அப்போதிலிருந்து இதுபோன்ற நடவடிக்கைகள் அதுவும் முன்னாள் முதலமைச்சர் ஒருவர் பாஸ்போர்ட் வைத்திருப்பது நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் என்பது இயல்பான விஷயமாக மாற்றப்பட்டுவருகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற போராட்டங்கள் காரணமாக மெகபூப முப்தி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இணைய வசதி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மெகபூப முப்தி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு வீட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின் அவர் மீது பணமோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மெகபூப முப்தியின் பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.