முக்கியச் செய்திகள் தமிழகம்

அசைவ பிரியர்களுக்கு சனிக்கிழமையன்று மெகா தடுப்பூசி முகாம்

அசைவம் சாப்பிடுபவர்களை கருத்தில் கொண்டு இந்த வாரம் சனிக்கிழமையன்று தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகின்ற நிலையில், தமிழ்நாடு அரசு வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடமாடும் பல் மருத்துவ வாகனத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அசைவம் உண்ணும் போது தடுப்பூசி செலுத்திக்கொள்ளக்கூடாது என யாரோ சொல்லியதாகவும் எனவே அவ்வாறு நினைத்துக்கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், நடமாடும் பல் மருத்துவ வாகனத்தை பள்ளிகளுக்கும் அனுப்பி மாணவர்களுக்கு சேவை செய்ய உள்ளோம். இதன் மூலம் குடிசை பகுதி மக்கள் மட்டும் அல்லாமல் பள்ளி மாணவர்களும் பயன்பட உள்ளனர். மக்கள் பயன்பாட்டின் அடிப்படையில் கூடுதல் நடமாடும் பல் மருத்துவ வாகனம் வாங்கப்படும்.

 

இன்னும், 30.42 லட்சம் பேர் இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பெகாசஸ் உளவு விவகாரம்: என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக இஸ்ரேல் விசாரணையை தொடங்கியது

EZHILARASAN D

முக அடையாளம் காணும் வசதியை ரத்து செய்த பேஸ்புக்!

Halley Karthik

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல், மழை பாதிப்புகள் குறித்து இன்று முதலமைச்சர் நேரில் ஆய்வு!

Saravana