சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தி பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசன் சாதனை படைத்தார்.
டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. தகுதி சுற்றுக்காக நேற்று நடந்த போட்டியில், ஸ்காட்லாந்து- பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பங்களாதேஷ் அணி தோல்வி அடைந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கே தண்ணி காட்டிய பங்களாதேஷ் அணி, ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தப் போட்டியில், பங்களாதேஷ் சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல் ஹசன் 4 ஓவர்களில் 17 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து சர்வதேச டி-20 தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். 89 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷகிப் அல் ஹசன், 108 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மலிங்கா 107 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் இருந்தார். அவரிடம் இருந்து முதலிடத்தை ஷகிப் தட்டி பறித்துள்ளார்.
நியூசிலாந்தின் டிம் சவுதி 99 விக்கெட் எடுத்து 3-வது இடத்திலும் பாகிஸ்தானின் அப்ரிதி 98 விக்கெட்டுகள் வீழ்த்தி டி 4-வது இடத்திலும் ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் 95 விக்கெட் வீழ்த்தி 5-வது இடத்திலும் உள்ளனர்.