மீனாட்சி திருக்கல்யாணத்தை காணவரும் கள்ளழகரை வரவேற்கும் விதமாக கள்ளழகர் வேடம் அணியும் பக்தர்களுக்காக பிரத்தியேகமான ஆடைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கி நடைபெற்று
வருகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி சுந்தரேசுவரர்
திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ள அழகர்மலையிலிருந்து கள்ளழகர் மதுரைக்கு
புறப்பட்டு வருகிறார்.
5ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் அழகரை வழி நெடுகிழிலும் பல்வேறு மண்டப படிகளில் மரியாதைகள் நடைபெறும். இந்த நிகழ்வுகளின் போது கள்ளழகரை வரவேற்கும் விதமாகவும், நேர்த்திக்கடனுக்காகவும் கள்ளழகர் வேடம் பூண்டு பக்தர்கள் வரவேற்பது வழக்கம்.
கள்ளழகர் வேடத்திற்கான ஆடைகள் தயாரிக்கும் பணி வழக்கம் போல இந்த ஆண்டும்
குன்னத்தூர் சத்திரம் பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 1 வயது முதல் 50 வயது வரை உள்ள அனைத்து மக்கள் மற்றும் பக்தர்கள் கள்ளழகர் வேடமணிந்து வரவேற்று வருகின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆடைகளுக்கான மூல பொருட்களை தயார் நிலையில் வைத்திருப்பதாகவும், ஆடரின் பேரில் ஆடைகள் தயார்படுத்தி வருகின்றனர். பக்தர்களுக்காக கள்ளழகர் ஆடைகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.







