ஆஸ்கர் வென்றும் மறையாத புகழ் ! ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடி வைரலான ஜெர்மனிய பெண்

ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் நண்பர்களுடன் இணைந்து ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த விடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில்…

ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் நண்பர்களுடன் இணைந்து ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த விடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்த ஆண்டு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல் பல்வேறு விருதுகளை குவித்ததோடு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதையும், தொடர்ந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதையும் தட்டித் தூக்கி இந்தியாவிற்கே பெருமையை பெற்றுக் கொடுத்தது.

Naatu Naatu RRR

சொல்லப்போனால் இந்த பாடல் வெளிவந்தது முதலே, மொழிகளை கடந்து உலகம் முழுவதும்மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்ததோடு, அவ்வபோது’நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஏராளமான பிரபலங்களும், மக்களும் ஆடி மகிழ்ந்து தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்தும் வந்தனர். அதில் குறிப்பாக நாட்டு நாட்டு பாடலுக்கு தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா நடனம் ஆடிய வீடியோ துவங்கி டெல்லியில் உள்ள தென் கொரிய தூதர் சாங் ஜே போக்குடன் தூதரக ஊழியர்கள் நடனம் ஆடிய வீடியோ, அமெரிக்காவில் ஹோலி கொண்டாட்டத்தின்போது அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் நடனம் ஆடிய வீடியோ, இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆடிய வீடியோ உள்ளிட்ட ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

அந்த வரிசையில் தற்போது, ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் நண்பர்களுடன் இணைந்து நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பகிரப்பட்டு ஒரு நாள் கூட ஆகாத நிலையில், இதுவரை 14,000 திற்கும் அதிகமான பார்வைகளையும், 1000 திற்கும் அதிகமான லைக்குகளையும் அள்ளி குவித்து வருகிறது. மேலும் இந்த வீடியோவில் பல்வேறு கருத்துக்களும் பகிரப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த விடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.