10 நாட்களில் ஒரு கிராமத்தையே மாற்றியமைத்த ஆதி கல்லூரி மாணவ, மாணவிகள்..!

உத்திரமேரூர் அருகே, ஆதி பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளின் நாட்டு நலப்பணி திட்ட செயல்பாடுகளால் ஒரு கிராமமே புதிய மாற்றங்களை பெற்றுள்ள நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்…

உத்திரமேரூர் அருகே, ஆதி பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளின் நாட்டு நலப்பணி திட்ட செயல்பாடுகளால் ஒரு கிராமமே புதிய மாற்றங்களை பெற்றுள்ள நிகழ்வு அந்த பகுதி மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள விசூர் ஊராட்சியில் கடந்த பத்து நாட்களாக வாலாஜாபாத் அடுத்த சங்கராபுறத்தில் செயல்பட்டு வரும் ஆதி பொறியியல் கல்லூரியின் மாணவ, மாணவிகள் நாட்டு நலத்திட்ட பணி முகாமினை நடத்தி வருகின்றனர்.

அந்தக் கல்லூரியில் நாட்டு நல பணித்திட்ட இயக்குனர் டாக்டர் வெங்கடேசன் தலைமையிலும், விசூர் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி முன்னிலையிலும் நடைபெறும் இந்த முகாமில் சுமார் 80 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அந்த ஊராட்சியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கோவில்கள், ஏரி, குளம், குட்டை, கால்வாய்களை சுத்தப்படுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனர்.

அந்த ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாக சென்று மரக்கன்றுகள் மற்றும் மஞ்சள் பை ஆகியவற்றை விநியோகித்ததுடன், சுற்றுப்புற சுகாதாரம், நீர் மேலாண்மை, கல்வி உட்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த கிராமங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. மாணவ மாணவிகளுக்கு கிராம மக்கள் உணவு, குடிநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கி
ஊக்கப்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த ஆதி பொறியியல் கல்லூரி மாணவர்களின் நாட்டு நலத்திட்ட பணி முகாமால் அந்த கிராமமே புதிய மாற்றங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.