கோயில் நகைகளை உருக்க, உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை எனவும், அறங்காவலர் நியமனத்துக்கு பின் நகைகளை உருக்க அனுமதி அளித்துள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை சூளை சீனிவாச பெருமாள் மற்றும் அங்காளம்மன் கோயில்களில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழையினால் பாதிக்கப்பட்ட கோயில் சுவர்களை சரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெரிய கோயில், சிறிய கோயில் என்ற பாகுபாடில்லாமல் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோயில் நகைகள் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக வும், நகைகளை உருக்க தடை விதிக்கவில்லை எனவும், அறங்காவலர் நியமனத்துக்கு பின் நகைகளை உருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கோயில் நகைகளை கணக்கிடும் பணி முடிவடைய ஓராண்டு ஆகும் எனவும் தெரிவித்தார்.