‘பத்திரப்பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக பட்டாக்கள் வழங்க நடவடிக்கை’ – அமைச்சர் செங்கோட்டையன்!

தென்மேற்கு பருவமழை பொறுத்தவரை மாஞ்சோலை பகுதியில் அதிகமாக மழை பெய்துள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தமிழக முதல்வர் மக்கள் விரும்பும் சிறந்த ஆட்சியை தந்திருக்கிறார். அதன் அடிப்படையில் துறையின் வழியாக ஆய்வு கூட்டத்தை மேற்கொண்டு உள்ளோம். அந்த ஆய்வு பணிகளை பொறுத்த வரை மக்களுக்கு தேவையான சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, முதியோர் உதவி தொகை என பல்வேறு திட்டங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும். ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் பொழுது கால தாமதம் ஏற்படுகிறது. அந்த குறைகளை சரி செய்ய வேண்டுவதற்காக வருவாய் வட்டத்தில் உள்ள அதிகாரிகளை ஆய்வு செய்ய கூறியுள்ளோம்.

அரசு நிலங்களை ஆய்வுப்படுத்தி அதை எந்த முறையில் அரசுக்காக பயன்படுத்தலாம். பத்திரப்பதிவில் பல்வேறு தேக்கங்கள் உள்ளது. பத்திரப் பதிவு செய்தவர்களுக்கு உடனடியாக பட்டாக்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கை சீற்றங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உள்ளோம். தென்மேற்கு பருவமழை பொறுத்தவரை மாஞ்சோலை பகுதியில் அதிகமாக மழை பெய்துள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றுக்கு நீர்வரத்தை அதிகரித்துள்ளது. இந்த ஆய்வுக் கூட்டத்தின் மூலமாக நாங்கள் எடுத்துச் சொல்வது ஒன்றே ஒன்றுதான். பேரிடர் மேலாண்மை துறை மூலமாக ஒரு புத்தகம் வெளியிடுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.