உஜ்வாலா சிலிண்டர் எண்ணிக்கை குறைப்பு – காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டனம்!

உஜ்வாலா திட்டம் பாஜகவினர் மிகப்பெரிய வெற்று வாக்குறுதி இன்று அம்பலமாகறது என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஏழை பெண்களுக்கு மோடி பரிசு.

உஜ்வாலா திட்டம் பாஜகவினர் மிகப்பெரிய வெற்று வாக்குறுதி இன்று அம்பலமாகிறது.

2016: 12 சிலிண்டர்கள் மானியம்

கடந்த ஆண்டு: 9 சிலிண்டர்களாக குறைப்பு

இன்று: வெறும் 4 சிலிண்டர்களாக மேலும் குறைப்பு!

ஒரு ஏழை பெண் 365 நாளும் சமைக்க வேண்டும், மோடி அரசு வெறும் 4 முறை மட்டுமே மானியம் தருகிறது!

“சராசரி நுகர்வு 4 சிலிண்டர்தான்” என்று அரசு சொல்கிறது – உண்மை என்னவென்றால், ஏழை குடும்பஙகள் வாங்க வசதியில்லாதால் குறைவாக பயன்படுத்துகின்றனர், தேவை இல்லாததால் அல்ல. இந்தியாவின் ஏழை பெண்களுக்கு மோடியால் இழக்கப்பட்ட துரோகம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.