கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கைப்பமங்கலம், பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அப்பகுதியில் சாலையோரம் சரக்கு லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அவ்வழியாக வந்த தமிழகத்தின் பதிவு எண் கொண்ட கார் ஒன்று, சரக்கு லாரியின் பின்புறத்தில் கடுமையாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முற்றிலுமாகச் சிதைந்து, உள்ளே இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த எட்டு பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.




