முக்கியச் செய்திகள் செய்திகள்

மதிமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு 6தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன், திமுக தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, மதிமுகவுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய திமுக தீவிரம் காட்டி வந்தது.

தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்கனவே இரு கட்சிகளுக்கும் இடையே 2 கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த மதிமுகவுக்கு, திமுக இன்று அழைப்பு விடுத்திருந்தது. மாலை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மதிமுகவிற்கு 6 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் மேலும் உதயசூரியன் சின்னத்திலே போட்டியிடுவோம் என்றும் தெரிவித்தார்.

முதன்முறையாக சட்டமன்றத்தில் மதிமுக- திமுக இணைந்து தேர்தலை சந்திக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

Advertisement:

Related posts

IPL 2021: ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதல்

Niruban Chakkaaravarthi

போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்த முதல்வர்!

Niruban Chakkaaravarthi

தயாரிப்பாளர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் நெருக்கடி: பாரதிராஜா குற்றச்சாட்டு!

Nandhakumar