தஞ்சையில் ஒன்பது வயது சிறுமி தொடர் ஓட்டத்தில் பங்கேற்று நோபல் உலக சாதனை படைத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் செங்கப்படுத்தான்காடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, மாலா தம்பதியரின் ஒன்பது வயது மகள் வர்ஷிஹா. இவர் தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நோபல் உலக சாதனை நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், காவல்துறை டி.எஸ்.பி. புகழேந்திகணேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் கலந்து கொண்ட வர்ஷிஹா 2 மணி நேரத்தில் 23 கிலோ மீட்டர் தூரம் தொடர் ஓட்டம் ஓடி நோபல் உலக சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மாணவி வர்ஷிஹாவை நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் நோபல் உலக சாதனை சான்றிதழ் வழங்கி, பதக்கத்தையும் அணிவித்துப் பாராட்டினார்.







