ஜூன் 27-ல் நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டம்…!

மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது

தமிழ் நாடு சட்டமன்றத்தேர்தல் 2026-ல் வைகோ தலைமையிலான மதிமுக, திமுக கூட்டணியில் அங்கம் வகித்தது. மதிமுக இந்த தேர்தலில் மொடக்குறிச்சி, மதுரை தெற்கு, கடையநல்லூர், சீர்காழி உள்ளிட்ட 4 தொகுதிகளில் போட்டியிட்டது. நான்கு தொகுதிகளிலும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. இவற்றுள் சீர்காழி மற்றும் கடையநல்லூர் 2 தொகுதிகளில் மதிமுக வெற்றி பெற்றது.

இந்த நிலையில் மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இம்மாதம் (ஜூன்) 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. அண்ணா நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெரும் இக்கூட்டத்தில் கட்சியின் நகர்வுகள் குறித்தும், அடுத்த கட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.