தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளை மட்டுமே வென்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் உட்கட்சி மோதல் ஏற்பட்டு அக்கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 32) என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார். அதிமுக நிர்வாகியான மகேந்திரன் தற்கொலைக்கு முன்னதாக வெளியிட்ட முகநூல் வீடியோவில் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அதிமுக நிர்வாகி மகேந்திரன் மகேந்திரன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர் உயிரிந்த மகேந்திரனின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.




