காவிரியில் உரிய தண்ணீர் பெற்றுத் தரக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தராத மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையம் முன்பாக டெல்டா விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை…

காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தராத மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையம் முன்பாக டெல்டா விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனது.மேலும் கர்நாடக அரசும் இந்தாண்டு காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கை தரவில்லை.இதனால் டெல்டா மண்டலங்களில் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கை பெற்றுத் தராத மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும், ராசிமணலில் தமிழக அரசு புதிய தடுப்பணை கட்டக்கோரியும், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தியும் டெல்டா விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் வைத்தியநாதன் தலைமையில் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக ரயிலை விவசாயிகள் மறியல் செய்ய முயன்றனர். இதனையடுத்து அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ரயில் மறியலை கைவிட செய்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மத்திய,மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.