ஆயன்குளம் முத்தாரம்மன் கோயில் கொடைவிழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம்!

திசையன்விளை அருகே ஆயன்குளம் முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு கும்மியடித்து குலவை இட்டு, நையாண்டி மேளம் வில்லிசை முழங்க தீபாராதனையுடன் திரளானப் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை…

திசையன்விளை அருகே ஆயன்குளம் முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு கும்மியடித்து குலவை இட்டு, நையாண்டி மேளம் வில்லிசை முழங்க தீபாராதனையுடன் திரளானப் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளம் முத்தாரம்மன்
கோயிலில் மதியக்கொடைவிழாவை முன்னிட்டு முத்தாரம்மனுக்கு உச்சிக்கால பூஜை வெகுவிமரிசையாக நடை பெற்றது.

மதிய கொடைவிழாவை முன்னிட்டு கோயில் முன்பாக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் தாம்பூலங்களை சுற்றி பெண்கள் குலவை இட்டு கும்மி அடித்தனர்.பின்பு நையாண்டி மேளம் வில்லிசை முழங்க பெருமாள் சுவாமிக்கும் தொடர்ந்து முத்தாரம்மன் மாரியம்மன் உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அலங்கார தீபாராதனையுடன் உச்சிகால பூஜை நடைபெற்றது.

கும்பம் சுமந்தபடி வந்த சுவாமியாடிகளை தொடர்ந்து மஞ்சள் தாம்பூலங்களை சுமந்தவாறு பெண்கள் மற்றும் சிறுமிகளும் வீதிகளில் ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் கோவிலை வந்து அடைந்ததும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.