தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று பொங்கல். இந்த ஆண்டு நாளை ஜனவரி 15 ஆம் நாள் பொங்கள் திருநாள் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமி போகி பண்டிகையையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள்ள எக்ச் பதிவில், நான்கரை ஆண்டுகள் மக்களை வாட்டி வதைத்த தீமைகள் யாவும் அகன்றிட , மக்கள் ஏற்றும் போகியின் நெருப்பு அழித்தொழிக்கட்டும். நாளை வரும் தை, தமிழகத்தின் மீட்சிக்கு அடித்தளமிடட்டும். அனைவருக்கும் இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.







