2வது ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு…!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கடந்த ஜனவரி 11 ஆம் தேதி  நடைபெற்றது. இதில் நியூசிலாந்தை இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியானது குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிற்று வருகிறது. முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி மைக்கேல் பிரேஸ்வெல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து இந்திய அணியின் முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரராக கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

அணி விவரம்

இந்திய :  ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, நிதீஷ்குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ்.

நியூசிலாந்து : டெவன் கான்வே (விக்கெட் கீப்பர்)), ஹென்றி நிகோலஸ், வில் யங், டேரில் மிட்செல், கிளென் ஃபிலிப்ஸ், மிட்செல் ஹே, மைக்கேல் ரே, மைக்கேல் பிரேஸ்வெல், ஜாக் ஃபோக்ஸ், கைல் ஜேமிசன், ஜேடன் லெனாக்ஸ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.