முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் தற்போது களத்தில் நான்கு முனை போட்டி இருக்கிறது. எந்த ஒரு கட்சியையும் நான் குறைத்து எடை போடவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது என்று கூறி தேர்தலை சந்தித்த நாம் தமிழர் கட்சி எட்டு சதவீதத்திற்கு மேலாக வாக்குகளை பெற்றிருக்கிறது அந்த வகையில் எந்த ஒரு கட்சியும் நான் குறைத்து எடை போடவில்லை.
தமிழ் நாடு தேர்தல் களத்தில் தற்போது திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனை போட்டி இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது இந்த நான்கு முறை போட்டியனது இரண்டு முனை போட்டியாக மாறும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.







