பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்படும்: நிதி அமைச்சர்

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங் களாக உயர்த்தப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை…

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங் களாக உயர்த்தப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து சட்டசபையில் உரையாற்றி வருகிறார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கியை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்படும்.

தேனி, நாகையில் சிப்காட் அமைக்கப்படும்.

கோவையில் ரூ.225 கோடியில் பாதுகாப்பு கருவி உற்பத்தில் பூங்கா அமைக்கப்படும்.

புதிய கனிமவள கொள்கை மூலம் அரசின் வருவாய் அதிகரிக்கப்படும்.

விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின்படி பொங்கலுக்கு 1.81 கோடி சேலை, வேட்டிகள் வழங்கப்படும்.

இலவச பள்ளி சீருடைகளுக்காக ரூ.409 கோடி ஒதுக்கீடு.

100 கோயில்களில் ரூ.100 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெறும்.

அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் புதுப்பிக்கப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.