சென்னை, சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்: நிதி அமைச்சர்

சென்னை, சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல்…

சென்னை, சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

கிருஷ்ணா நதிநீரை சென்னை நீர் தேக்கங்களுக்கு குழாய் மூலம் கொண்டு வர சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.

சீர்மிகு நகர திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு; அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கீடு

சென்னை பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்.

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் வடிகால் அமைக்க ரூ.80 கோடி ஒதுக்கீடு

நகர்ப்புற ஏழைகளுக்காக நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்படும்.

பொது சொத்து பராமரிப்பு பணிக்காக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி நிதி ஒதுக்கீடு; குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை அமைப்பதில் அரசு உறுதி.

CMDA போன்று மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரிலும் நிறுவப்படும்; தமிழ்நாடு வீட்டு வசதித்துறை, உலக வங்கியின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்படும்.

நகர்ப்புற ஏழைகளுக்காக நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்படும்

நெடுஞ்சாலை துறைக்கு ரூ.17,899 கோடி ஒதுக்கீடு; புறவழிச்சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளுக்கு புறவழிச்சாலைகள் ஏற்படுத்தப்படும்.

623 கோடியில் 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

மகளிர், மாற்றுத் திறனாளிகள் இலவச பயணத்திற்காக ரூ.750 கோடி டீசல் மானியம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.