மசூதிகள், தேவாலயங்களைப் புதுப்பிக்க தலா ரூ.6 கோடி : நிதி அமைச்சர்

மசூதிகள் மற்றும் தேவாலயங்களை புதுப்பிக்க தலா 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

மசூதிகள் மற்றும் தேவாலயங்களை புதுப்பிக்க தலா 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. நிதியமைச்சர்
பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து சட்டசபையில் உரையாற்றி
வருகிறார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான ஒட்டு மொத்த நிதி ஒதுக்கீடு 4,142 ஆக உயர்த்தப்படுகிறது.

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.1,725 கோடி ஒதுக்கீடு.

கொரோனாவால் பெற்றோரை இழந்த 5963 குழந்தைகளுக்கு ரூ.95 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடாக ரூ.48 கோடி.

300 சுற்றுலாத்தளங்கள் மேம்படுத்தப்படும்.

சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு.

விளையாட்டு வசதிகள் இல்லாத அனைத்து தொகுதிகளிலும் தலா ரூ.3 கோடி செலவில் விளையாட்டு அரங்கம் நிறுவப்படும்.

விளையாட்டு மேம்பாட்டிற்கான நிதி ரூ.225 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பணியின் போது உயிரிழக்கும் அரசு பணியாளர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் உதவி மானியம் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.