கோடம்பாக்கம் – பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை 2025-ம் ஆண்டு தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து சட்டசபையில் உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
மகளிர், மாற்றுத் திறனாளிகள் இலவச பயணத்திற்காக ரூ.750 கோடி டீசல் மானியம்.
தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது; 2,500 மெகாவாட் மின்சாரம் மின் சந்தையிலிருந்து வாங்கப்படுகிறது.
தனித்துவமான மாநில கல்விக்கொள்கையை வகுக்க, கல்வியாளர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.
பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.32,599 கோடி நிதி ஒதுக்கீடு.
உயர்கல்வித் துறைக்கு ரூ.5,369 கோடி நிதி ஒதுக்கீடு.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க அறிக்கை தயார் செய்யப்படும்.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதிநிலைமை சீரமைக்கப்படும்.
மின்சாரத்துறைக்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு.
413 கல்வி நிறுவனங்களுக்கு தலா 40 கையடக்க கணினிகள்; இதற்காக ரூ.13.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் கல்லூரி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.509 கோடி வந்துள்ளது; அதில் ரூ.241 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 8 லட்சம் தடுப்பூசிகள் தேவையுள்ள நிலையில் 2.4 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.







