இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில், ஷவ்வால் மாதம் தொடங்குவதைத் தொடர்ந்து, ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
அனைவருக்கும் ஈத் முபாரக் ! 🌙 உங்கள் குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் நீங்கள் மிகவும் சிறப்பான ஒரு நாளைக் கழிப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் உரித்தாகட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை பொருத்தவரை வரும் சனிக்கிழமை ரம்ஜான் கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.







