இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகள் – இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, இந்திய…

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடுகிறது. அதேபோல் இந்தியா வரும் ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டியிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த தொடர்களுக்கான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய மகளிர் அணி : ஹர்மன்பிரீத் கவுர் (C), ஸ்மிருதி மந்தனா (VC), ஜெமிமா ரோட்ரிகஸ், ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா (wk), ரிச்சா கோஷ் (wk), அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், மன்னாத் காஷ்யப் சைகா இஷாக், ரேணுகா சிங் தாக்கூர், டைட்டாஸ் சாது, பூஜா வஸ்த்ரகர், கனிகா அஹுஜா, மின்னு மணி.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய மகளிர் அணி : ஹர்மன்பிரீத் கவுர் (C), ஸ்மிருதி மந்தனா (VC), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி சர்மா, யாஸ்திகா பாட்டியா (WK), ரிச்சா கோஷ் (WK), சினே ராணா, சுபா சதீஷ், ஹர்லீன் தியோல் , சைகா இஷாக், ரேணுகா சிங் தாக்கூர், டைட்டாஸ் சாது, மேக்னா சிங், ராஜேஸ்வரி கயக்வாட், பூஜா வஸ்த்ரகர்.

இந்த போட்டிகள் அனைத்தும் மும்பையில் உள்ள இரண்டு மைதானங்களில் டிசம்பர் மாதம் நடைபெறுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.