குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட காப்பக உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஆகியோருக்கு வரும் 16ம் தேதி வரை நீதிமன்றம் காவல் விதிக்கப்பட்டது.
மதுரையில் இதயம் அறக்கட்டளை நடத்தி வந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து, கடந்த 29-ஆம் தேதி இரண்டு குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 7 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து தலைமறைவாகிய இதயம் அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமார் மற்றும் உதவியாளர் மாதர் ஷா ஆகிய இருவரும் தேனி மாவட்டம் போடி அருகே கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து மதுரை கூடல்புதூர் காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற போலீசார், பின்னர் இருவரையும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ராஜலிங்கம் முன்பாக ஆஜர்படுத்தினர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, இருவரையும் வரும் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.