மதுரை குழந்தைகள் காப்பகத்தில் போலி இறப்பு சான்றிதழ்கள், அரசு முத்திரைகள் கண்டெடுப்பு

மதுரையில் குழந்தை விற்பனை வழக்கில் தொடர்புடைய காப்பகத்தில் நடத்திய சோதனையில், போலி இறப்பு சான்றிதழ்கள், அரசு முத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் செயல்பட்டுவந்த இதயம் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆதரவற்றோர் மையத்திலிருந்து இரு…

மதுரையில் குழந்தை விற்பனை வழக்கில் தொடர்புடைய காப்பகத்தில் நடத்திய சோதனையில், போலி இறப்பு சான்றிதழ்கள், அரசு முத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் செயல்பட்டுவந்த இதயம் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆதரவற்றோர் மையத்திலிருந்து இரு குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், இதயம் அறக்கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பாளரான கலைவாணி, முகவர்களாக செயல்பட்டுவந்த செல்வி, ராஜா உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7 பேரும் வரும் 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, காப்பகத்தில், போலீசார் நடத்திய சோதனையில், போலி அரசு முத்திரைகள், இறப்பு சான்றுகள், மயான ரசிது மற்றும் மருத்துவமனை ரசீது புத்தகங்கள் கட்டுகட்டாக கண்டுடெடுக்கப்பட்டன.

முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும், சிவக்குமார் மற்றும் அவரது உதவியாளர் மாதார்ஷா ஆகிய இருவரையும் தனிப்படை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.