தமிழ்நாடு முழுவதும் இன்று, நியூஸ் 7 தமிழ் கள ஆய்வை மேற்கொண்டது, அதில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட குடியிருப்பு கட்டடங்களின் தற்போதைய நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னை மண்டலத்தில், 3 ஆயிரத்து 922 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்திருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல, மதுரையில் 310 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 20 வீடுகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளது கள ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் முழுமையாக சேதமடைந்த குடியிருப்புகள் 300 எனவும், பகுதியாக புனரமைக்கப்பட வேண்டியவை 100 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல, கோவை மாவட்டத்தில் முழுமையாக 100 வீடுகள் சேதமடைந்துள்ளன. மற்றவை புனரமைக்கப்பட வேண்டியவை என்பது நமது கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் முழுமையாக 366 வீடுகளும் பகுதியாக 272 வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. அதேபோல, சேலம் மாவட்டத்தில் முழுமையாக 400 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பகுதியாக 250 வீடுகள் புனரமைக்கப்பட வேண்டியவையாக உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் முழுமையாக 17 வீடுகளும், பகுதியாக 40 வீடுகளும் சேதம் அடைந்திருப்பது கள ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. அதேபோல, கரூர் மாவட்டத்தில் 32 வீடுகள் முழுமையாகவும், 80 வீடுகள் பகுதியாகவும் சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன.
திருப்பூரில் முழுமையாக 60 வீடுகளும், மற்றவை புனரமைக்கப்பட வேண்டிய நிலையிலும் இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல, திருச்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட வீடுகளில் 25 வீடுகள் பராமரிக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதும் நியூஸ் 7 தமிழ் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது.








