கொல்கத்தாவில் 70 அடி உயர பிரமாண்ட மெஸ்ஸி சிலை அகற்றம்!

கொல்கத்தாவில் 70 அடி உயர பிரமாண்ட மெஸ்ஸி சிலை அகற்றப்பட்டது.

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் போது அர்ஜென்டினாவின் கால்பந்து வீரர் மெஸ்சிக்கு 70 அடி உயர சிலை நிறுவப்பட்டது. இதை கடந்த ஆண்டு கொல்கத்தா வந்த மெஸ்சியே திறந்து வைத்தார். இந்த நிலையில் கடந்த 25ம் தேதி அப்பகுதியில் வீசிய பலத்த காற்றுக்கு ஆடியது. இது தொடர்பாக உள்ளூர்வாசிகள் போலீஸில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், இன்ஜினியர்கள் வரவழைக்கப்பட்டு சிலை ஆய்வு செய்யப்பட்டதில், சிலையின் கட்டமைப்பு உறுதித்தன்மை இல்லை, அது பாதுகாப்பற்றது என்று தெரிய வந்தது. இதையடுத்து, சிலை தற்காலிகமாகக் கயிறுகளால் கட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக மெஸ்ஸியின் சிலையை அகற்றி, வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் பணியை மேற்கு வங்காள அரசு மேற்கொண்டது. ராட்சத கிரேனின் உதவியுடன் அந்த சிலை பத்திரமாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.