சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனிடையே நேற்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்தது. நேற்று கிராமுக்கு ரூ.130 குறைந்து கிராம் ரூ.14,500க்கும், சவரனுக்கு ரூ.1040 குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை. அதன்படி, தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,16,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போன்று வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




