டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் #Amaran!

அமரன் திரைப்படத்திற்கான முன்பதிவில், டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.…

அமரன் திரைப்படத்திற்கான முன்பதிவில், டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருகின்றன.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

உண்மைக்கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், தீபாவளிக்கு (அக்.31) வெளியாக உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான ‘ஹே மின்னலே’ பாடலும், இரண்டாவது பாடலான ‘வெண்ணிலவு சாரல்’ பாடலும் சமீபத்தில் வெளியாகி அனைவரது மனதையும் கவர்ந்தது. தற்போது வரை இந்த இரண்டு பாடல்களும் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இப்பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தாலேயே பலரும் படத்தை பார்க்க ஆர்வமாக இருந்தனர். இதற்கிடையே, இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த சூழலில், ‘அமரன்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சி டெல்லியில் ராணுவ வீரர்களுக்காக திரையிடப்பட்டது. அவர்களிடமிருந்து மிகுந்த பாராட்டுகளைப் பெற்றதாக கூறப்படுகிறது. இந்தத் திரையிடல் நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி, நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றனர். இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

மேலும், இப்படம் 2 மணி 48 நிமிடங்கள் கால அளவில் உருவாகியுள்ளது. அமரன் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியதை அடுத்து டிக்கெட்டுகள் விறு விறுவென விற்பனையாகி வருகிறது. தீபாவளி வெளியீடாக பிரதர், பிளடி பெக்கர், லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் வெளியாக உள்ள நிலையில், அவற்றின் முன்பதிவை அமரன் திரைப்படம் முந்தியுள்ளது. அமரன் திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆகி வருகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.