சசிகலா சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க சதி நடக்கிறது- கே.பாலகிருஷ்ணன்!

சசிகலா சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க சதி நடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரையில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மூத்த உறுப்பினர்களுக்கான பாராட்டு…

சசிகலா சிறையிலிருந்து வெளியில் வராமல் இருக்க சதி நடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மதுரையில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் மூத்த உறுப்பினர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு பலியான மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். சசிகலாவிற்கு கொரோனா தொற்று எப்படி வந்தது என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, தண்டனை காலம் முடிவடைந்து வரும் 27 ஆம் தேதி விடுதலையாக உள்ளார். இந்நிலையில், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply