ராகுல் காந்தியின் வருகையால் தமிழக காங்கிரஸ் மற்றும் தமிழக மக்களிடையே எழுச்சி ஏற்படும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நாளை நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். இதற்காக தாராபுரம் பேருந்து நிலையம் எதிரே 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வரும் பொதுக்கூட்ட மேடையில் அவர் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதற்கான ஏற்பாடுகளை தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், கேவி. தங்கபாலு, நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் குண்டுராவ் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய குண்டுராவ், ராகுல் காந்தி வருகையால் தமிழக கங்கிரஸ் மற்றும் தமிழக மக்களிடையே புதிய எழுச்சியும், புத்துணர்வும் ஏற்படும் எனக் கூறினார்.







