சேலம் பெரமனூரில் பள்ளி ஆசிரியைக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து செல்கின்றன. கொரோனா பரவலை தடுக்க சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டம் பெரமனூரில் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து அவரை தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக அவர் பணியாற்றிய சேலம் கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளனர். இதற்கு முன்னதாக சேலம் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.







