மனைவியின் விருப்பத்திற்கு மாறாக, பாலியல் உறவு கொள்ளும் கணவனிடம் இருந்து மனைவி விவாகரத்து கோரலாம் என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித் துள்ளது.
1995 ஆம் ஆண்டு ரியஸ் எஸ்டேட் பிசினஸ் செய்துவந்த ஒருவருக்கு டாக்டர் ஒருவர் தனது மகளை திருமணம் செய்து கொடுத்தார். ஒரு கார், வீடு, 501 சவரன் நகை அவருக்கு வரதட்ச னையாகக் கொடுக்கப்பட்டது. ஆனால், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மணமகளின் குடும்ப்பம் ரூ.77 லட்சத்தையும் கொடுத்திருக்கிறது.
இதையடுத்து கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர் மனைவி, குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினார். அவர் தாக்கல் செய்த மனுவில், தனது விருப்பமின்றி தன் கணவர் பாலியல் உறவில் ஈடுபடுவதாகவும் உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் கடந்த 2009 ஆம் ஆண்டு இவர்களுக்கு விவாகரத்து வழங்கியது.
இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் கணவர் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் முகமது முஸ்டாக் மற்றும் கவுசர் எடப்பாகத் முன் விசாரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதிகள், மனைவியின் விருப்பமில்லாமல் பாலியல் உறவில் ஈடுபடும் கணவனை தண்டிக்க சட்டத்தில் வழியில்லை என்றாலும் மனைவியின் விருப்பத்தை மதிக்காமல் அவரை துன்புறுத்துவது பாலியல் வன்கொடுமையில்தான் சேரும். இதுபோன்ற வழக்குகளில் மனைவி விவாகரத்து கோரிவதற்கு, கணவனின் இந்த நடத்தை வழி வகுக்கிறது. இந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய உத்தரவு உறுதி செய்யப்படு கிறது என்று தீப்பளித்தனர்.







