கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் குளித்த சிறுவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காரனோடை பாலத்தின் குறுக்கே செல்லும் கொசஸ்தலை ஆற்றில் காரனோடை பகுதியை…

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் குளித்த சிறுவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காரனோடை பாலத்தின் குறுக்கே செல்லும் கொசஸ்தலை ஆற்றில் காரனோடை பகுதியை சேர்ந்த ரஹமத் (15 ), அர்ஜுன் (13  )மற்றும் சத்யா( 14 ) ஆகியோர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் சிறுவர்களை தேடினர். பின்னர் நீண்ட தேடுதலுக்கு பின்னர் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.