“தொன்மையும் இனிமையும் கலந்த தமிழ் மொழியை உலகறியச் செய்வோம்” – அண்ணாமலை!

தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டு பன்மொழிக் கற்றலை வளர்ப்போம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மனிதனின் சிந்தனை, உணர்வு, படைப்பாற்றல் அனைத்தும் தாய்மொழி வழியாகவே மலர்கின்றன.

அடிப்படைக் கல்வி தாய்மொழியில் வழங்கப்படுவது கல்விக் கொள்கை மட்டுமல்ல, அது ஒரு அடிப்படை உரிமை. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசியக் கல்விக் கொள்கையும், தாய்மொழி வழி கற்றலை கட்டாயமாக்கியுள்ளது. உலக நாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ அமைப்பும், தாய்மொழி வழிக் கற்றலை வலியுறுத்துகிறது.

தாய்மொழியை அடிப்படையாகக் கொண்டு பன்மொழிக் கற்றலை வளர்ப்போம். நம் தொன்மையும் இனிமையும் கலந்த தமிழ் மொழியை உலகறியச் செய்வோம். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவட்டும். நம் தாய்மொழி தமிழின் பெருமை தலைமுறைகளைத் தாண்டி ஒலிக்கட்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.