முக்கியச் செய்திகள் குற்றம்

திருமண மோசடி கும்பல்: கணவனே மனைவியை போலிஸில் பிடித்துக் கொடுத்த பரிதாபம்

திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவியின் வாட்ஸ் அப்பில் இருந்த  மெசேஜை கேட்டு அதிர்ந்து போன கணவன். நண்பர்களுடன் மோசடி கும்பலை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த பரிதாபம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாசப்ப கவுண்டன் புதூரை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு 35 வயதான நிலையில் திருமணம் செய்து பெண் பார்க்க நினைத்த அவர் பெற்றோர்கள் நண்பர்களிடம், உறவினர்களிடம் கூறி உள்ளார். அதைத்தொடர்ந்து புளியம்பட்டி அருகே உள்ள பரிசபாளையத்தை சேர்ந்த மலர் என்ற பெண் புரோக்கரிடம், திருமணத்திற்குப் பெண் பார்க்கக் கூறி உள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின் 27 வயதில், தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரது மகள் சரிதா என்ற பெண் இருப்பதாகச் சரவணனிடம் கூறி உள்ளனர். அதைத்தொடர்ந்து சரவணனும், சரிதாவைப் பார்த்து உள்ளார். அப்போது சரிதா குறித்து விசாரணை செய்த போது, தாய் தந்தை விபத்தில் இறந்து விட்டதாகவும் கூறி உள்ளார். அப்போது சரிதாவின் பெரியம்மா என அறிமுகப்படுத்திக்கொண்ட விஜயலட்சுமி,  திருமண வேலைகளைச் சொந்த மகளுக்குச் செய்வது போன்று முன்னின்று செய்துள்ளார்.

இதற்கிடையே திருமணம் உறுதியானதும், இதற்காக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கமிசனாக புரோக்கர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று விஜயலட்சுமி கூறி உள்ளார். அதைத்தொடர்ந்து சரவணனும் நண்பர்கள், உறவினர்களிடம் 3 லட்சம் ரூபாயைக் கடனாக வாங்கி புரோக்கர் கமிசனாக ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயையும், மீதியைத் திருமணத்திற்குச் செலவு செய்து உள்ளார்.

அதைத்தொடர்ந்து கடந்த 20.8.2022 தாசப்ப கவுண்டன் புதூர் சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் சரிதாவைச் சரவணன், வெகு விமரிசையாகத் திருமணம் செய்து உள்ளார். திருமணத்திற்குப் பிறகு கணவன், மனைவி இருவரும் சந்தோசமாக வாழ்க்கையை ஆரம்பித்தனர்.


இந்நிலையில் அவரது பாசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் இடி விழுந்தது. மனைவி வெளியே இருந்த நேரத்தில் மனைவியின் கைப்பேசியில் வாட்ஸ் அப் மெசேஜ் வரவே, ஏதேச்சையாக வாட்ஸ் அப்பை பார்த்த போது, சரிதாவின் பெரியம்மா என்று கூறப்பட்ட விஜயலட்சுமிக்கு இரண்டு வாய்ஸ் மெசேஜ்களை சரிதா அனுப்பி இருப்பது தெரிய வந்தது. நேரடியாக பேசாமால் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன என நினைத்த சரவணன், அந்த வாய்ஸ் மெசேஜை கேட்க ஆரம்பித்த போது இடிந்தே போனார்.

அதில், இங்கு எல்லோரும் இருப்பதால் பிரியாக பேச முடியாது. நான் இந்த வாரம் ஊருக்கு போக வேண்டும். இந்த வாரம் நீயா வந்து அழைச்சுட்டு போகிற மாதிரி நீயா வா, ஊருக்கு போயிட்டு, குழந்தைகளை பார்த்துட்டு வந்துடறேன்.  இரண்டு் நாளில் எஸ்கேப் ஆகிற மாதிரி ஆளா பாரு. எனக்கு காசு தேவை இருக்கு.  நான் ஓடி போனா இந்த பையன் ஏதாவது பண்ணினாலும் பண்ணிக்கும்.அதுவும் ஒரு பயமா இருக்கு. ரொம்ப பாசமாக இருக்காங்க. அதனால் விட்டுட்டு போகவும் மனசு இல்லை. இப்போதைக்கு கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் சொல்லிக்கலாம் என்ற முடிவில் இருக்கேன். இங்க இருந்து காசு, பணம் சம்பாதிக்க முடியாது. நல்லா யோசனை பண்ணி வேற யாராவது இருந்தால் சொல்லு என்று பேசி உள்ளார்.

மனைவி என நினைத்து பாசத்தை காட்டிய பெண், மோசடி கும்பலை சேர்ந்தவர் என்பதை அறிந்த சரவணன் இடிந்து போனார். சரவணின் நிலை கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள், மோசடி கும்பலை கையும் களவுமாக கூண்டோடு பிடிக்க முடிவு செய்தனர். தனது நண்பருக்கு பெண் பார்த்துக்கொண்டு இருப்பதாகவும், உங்கள் பெரியம்மாவிடம் கூறி ஏதாவது பெண் இருந்தால் பார்க்க சொல்லு என கூறி உள்ளார்.

அதை நம்பிய சரிதாவும், விஜயலட்சுமியை தொடர்பு கொண்டு தனது கணவரின் நண்பருக்கு பெண் தேவை என கூறவே, விஜயலட்சுமியும், தனக்கு தெரிந்த பெண் இருப்பதாகவும்,  அதற்கு விஜயலட்சுமி தனக்கு கமிசன் எதுவும் வேண்டாம் என்றவர், மற்ற நான்கு புரோக்கர்களுக்கு மட்டும் கமிசனாக 80 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

விஜயலட்சுமியும் விருதுநகரில் இருந்து  ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு வந்துள்ளார். விஜயலட்சுமி மற்றும் அவருடன் வந்த பெண்ணை வீட்டிற்குள் அழைத்த சரவணன், நண்பர்கள் உதவியுடன், விசாரித்த போது, தி்ருமணமாகாத இளைஞர்களையும், மனைவியை இழந்த வயதானவர்களை குறிவைத்து திருமணம் என்ற பெயரில் மோசடி செய்து வரும் கும்பல் எனபது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து மோசடி கும்பல் குறித்து சரவணன், பங்களாபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த பங்களாபுதூர் போலீசார் சரவணனின் வீட்டிற்கு சென்று சரிதா, விஜயலட்சுமி, விஜயா ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தாய்லாந்து மீனவ சகோதரர்களுக்குச் சிக்கிய பலக்கோடி மதிப்பிலான அரியவகை முத்து!

Jayapriya

பெண்களுக்குப் பதிலாக பதவிப் பிரமாணம் எடுத்த ஆண்கள்

EZHILARASAN D

முதல்வர் பதவியை தக்க வைக்க பிரதமரை ஆதரிக்கிறார் பழனிசாமி : முருகவேல் ராஜன்!

Halley Karthik