முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை; அண்ணாமலை கண்டனம்

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை விதித்துள்ளதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு சட்டம் – ஒழுங்கைக் காரணம் காட்டி மாநில காவல்துறை தடைவிதித்துள்ளது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முக்கியமான அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கில், ஆர்,எஸ்.எஸ் அமைப்பிற்கு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும், அக்டோபர் 2ம் தேதி, ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ள ஊர்வலம் நடத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா முழுவதும் நடைபெறும் ஒரு பாரம்பரியம் மிக்க ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தமிழகத்தில் மட்டும் தடுக்கக் காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காத வகையில், பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கும், ஊர்வலங்களை நடத்துவதற்கும், ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தில் சமஉரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை பொதுக் கூட்டத்தையும் ஊர்வலத்தையும் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தலாமே தவிர அனுமதி மறுக்க, காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், உயர்நீதிமன்றம், ”ஆர்எஸ்எஸ்” அமைப்பிற்கு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதன் தீர்ப்பை அவமதித்து, தமிழக காவல்துறை ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துள்ளது, வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்தினால்,  தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, பேரணிக்குத் தடை விதிக்கப்படுவதாகவும், காவல்துறையின் கடிதத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.  அந்த கடிதத்தின் தகவல் உண்மையெனில், பிஎப்ஐ அமைப்பினர், வன்முறை நடத்தும் அளவிற்கு தமிழகத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறார்களா?  அப்படி என்றால் காவல்துறை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு இருப்பதை ஒத்துக் கொள்கிறதா? அல்லது, சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறுகிறதா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா முழுவதும் ஒழுங்குடன், அமைதியுடன், கண்ணியத்துடன், கட்டுப்பாட்டுடன், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஆர்எஸ்எஸ் ஊர்வலம், இந்த ஆண்டு மட்டும் எப்படி சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று தமிழக காவல்துறை மட்டும் நினைப்பது ஏன்? தங்களால் சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாது என்று தமிழக அரசும் காவல்துறையும் அச்சப்படுகிறதா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்டை மாநிலமான பாண்டிச்சேரியில், காரைக்காலில், ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தடை ஏதுமின்றி நடைபெறுவதாகவும், கர்நாடகம், ஆந்திரம், கேரளம், தெலுங்கானா என அனைத்து மாநிலங்களிலும், நாடு முழுவதும் ஊர்வலம் நடத்தப்படும் சூழலில், தமிழ்நாட்டிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு, ஊர்வலம் நடத்த காவல் துறையின், முறையான அனுமதி வழங்க, தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் கேட்டு கொள்வதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொலைக் குற்றவாளி யுவராஜ் கோவை சிறைக்கு மாற்றம்

G SaravanaKumar

மும்பைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் – போலீசார் உஷார்

Mohan Dass

நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு எலும்பு முறிவு

Halley Karthik