தமிழுக்கு பல்வேறு சோதனைகள் வந்து கொண்டு இருக்கிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் நகரபகுதியில் இயங்கி வரும் எம்.ஆர்.சி அரசு பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ரோஜா பூ, இனிப்பு வழங்கினார். அதனை தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் பொன்முடி, குழந்தைகள் கல்வி விளையாட்டு இவை இரண்டிலும் திறமையாக செயல்பட வேண்டும் என்றார்.
கல்வியும், விளையாட்டும் சிறப்பாக அமைந்தால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என கூறினார். தமிழ்தாய் வாழ்த்து முன்பெல்லாம், ரெக்கார்டில் போடும் போது பாட்டுக்கூட வராது, மியூசிக் மட்டுமே வரும் என்றும் அதையெல்லாம் மாற்றி, தமிழ்தாய் வாழ்த்தை எல்லோரும் பாட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதை தொடர்ந்து இன்று மாணவர்கள் பாடுகின்றனர் என தெரிவித்தார்.
மாணவர்கள் வாய்விட்டு தமிழ்தாய் வாழ்த்துகளை பாடுவது நெகிழ்ச்சியாக இருப்பதாக கூறிய அமைச்சர் பொன்முடி, தமிழுக்கு பல்வேறு சோதனைகள் வந்து கொண்டு இருக்கிறது என தெரிவித்தார்.








