தொடங்கிய இரண்டு மாதங்களுக்குள் கட்சியின் பெயரை மாற்றிய குலாம் நபி ஆசாத்

முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தமது கட்சியின் பெயரை முற்போக்கு ஆசாத் கட்சி என மாற்றியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத்,…

முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தமது கட்சியின் பெயரை முற்போக்கு ஆசாத் கட்சி என மாற்றியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான குலாம் நபி ஆசாத், கடந்த ஆகஸ்ட் மாதம் 26ந்தேதி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் வலம் வந்த குலாம் நபி ஆசாத், திடீரென அக்கட்சியின்  தலைமை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறிவிட்டு காங்கிரசிலிருந்து வெளியேறியது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காங்கிரசிலிருந்து விலகிய ஒரு மாதத்தில் கடந்த செப்டம்பர் 26ந்தேதி ஜனநாயக ஆசாத் கட்சி என்கிற பெயரில் புதிய கட்சி ஒன்றை குலாம் நபி ஆசாத் தொடங்கினார். ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு தமது கட்சி செயல்படும் என அப்போது அவர் கூறினார்.

இந்நிலையில் கட்சி தொடங்கிய இரண்டு மாதத்திற்குள் அதன் பெயரை மாற்றியுள்ளார் குலாம் நபி ஆசாத். முற்போக்கு ஆசாத் கட்சி என தமது கட்சியின் பெயரை மாற்றியுள்ள குலாம் நபி ஆசாத், இந்த பெயர் மாற்றத்தை பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.