முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ரோஹிங்கியா அகதிகள் விவகாரம்; உத்தரவை திரும்பபெற்ற மணிப்பூர் அரசு

மியான்மரிலிருந்து வந்த ரோஹிங்கியா அகதிகளுக்கு உணவு மற்றும் இருப்பிடம் வழங்கக் கூடாது என்று மணிப்பூர் அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்புகளில் எதிர்ப்பு எழுந்தன. இந்நிலையில் ரோஹிங்கியா அகதிகள் குறித்து வெளியிட்ட உத்தரவை மணிப்பூர் அரசு திரும்பபெற்றுள்ளது.

மியான்மர் நாட்டில் ரோஹிங்கா முஸ்லிம்கள் மீது நடந்த வன்முறையால் லட்சக்கணக்கான அகதிகள் பங்களாதேஷ், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் குடியேறினார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உள்ள ரோஹிங்கா முஸ்லிம்கள் மீண்டும் மியான்மருக்கு அனுப்பவேண்டும், அவர்களுக்கு உதவிகள் வழங்குவது நிறுத்தப்படவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கடந்த 26-ம் தேதி சுராச்சந்த்பூர், சாண்டெல், உக்ருல் உள்ளிட்ட ஐந்து மாவட்ட துணை ஆணையர்களுக்கு அனுப்பியிருந்த ஆணையில், “மணிப்பூரில் தங்கியுள்ள அகதிகளுக்கு உணவு மற்றும் இருப்பிடம் வழங்கக் கூடாது. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் அகதிகளுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கலாம். மேலும் ஆதார் அட்டையில் மக்கள் சேர்க்கையை நிறுத்திவைக்கவும்” அந்த ஆணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மணிப்பூர் அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இதனையெடுத்து அகதிகள் குறித்த மணிப்பூர் அரசின் உத்தரவு திரும்ப பெறப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக ஐநா சபைக்கான மியான்மார் தூதர், “மியான்மார் அகதிகளுக்கு வேண்டிய உதவிகளை வழங்குமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்” என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சூடான் உள்நாட்டு போரில் இதுவரை 413 பேர் உயிரிழப்பு! – உலக சுகாதார அமைப்பு தகவல்

G SaravanaKumar

மல்யுத்த வீராங்கனைகள், எந்த ஆதாரங்களையும் இதுவரை அளிக்கவில்லை – அண்ணாமலை

Web Editor

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் தேரோட்டம்!

Web Editor