ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா உறுதி!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி…

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 56,211 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாககவும், 271 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவரது மகனும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில், “என் தந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு நோய் தொற்றுக்கான சில அறிகுறிகளும் இருக்கின்றது. எங்கள் குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளோம். கடந்த சில நாட்களாக எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொண்டு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.