ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா வெற்றி பெற்றுள்ளார்.உக்ரைன் வீராங்கனை மார்கரைட்டாவை 4-3 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி, மனிகா பத்ரா வெற்றியடைந்துள்ளார்.
டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றை போட்டி இன்று மதியம் 1.15 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா 2 வது சுற்றில் உக்ரைன் வீராங்கனை மார்கரைட்டாவை எதிர்கொண்டார். இதில் 4-3 என்ற புள்ளி கணக்கில் அவர் வெற்றிபெற்றார்.
டோக்கியோவில் 2020 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாளான நேற்று மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில், மீராபாய் சானு கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வாங்கினார். நேற்று மாலை 4.15 மணிக்கு நடந்த 69 கிலோ குத்துச்சண்டை பிரிவுக்கான முதல் சுற்றுலே விகாஸ் கிரிஷன் தோல்வியடைந்தார்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இந்திய மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடவர் லைட் வெயிட் இரட்டையர் துடுப்பு படகு போட்டியில், இந்தியாவின் அர்ஜுன், அர்விந்த் 3-வது இடம் பிடித்து அரையிறுதிக்கு தேர்வானார். தொடர்ந்து பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதைத்தொடர்ந்து மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா அணி உக்ரைன் கிச்நொக் இரட்டையர்களிடம் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாட்டை சேர்ந்த சதயன் ஞானசேகரன் இரண்டாவது சுற்றில் தோல்வியை தழுவினார். இதனிடையே, டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் மனிகா பத்ரா இரண்டவாது சுற்றில் அசத்தலான வெற்றியை தன்வசமாக்கினார்.







