மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மிக விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் சைதாபேட்டையின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் தரமற்ற முக கவசம் வழங்கியது குறித்து விசாரணை நடைபெற்ற வருவதாகவும் வரும் புதன்கிழமை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இலவச தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
.தொடர்ந்து பேசிய அவர் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதலமைச்சர் மிக விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாகவும், அதற்காக விழா நடைபெறும் இடத்தை தேர்வு செய்ய இன்று மாலை கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.