மாண்டஸ் புயல் கரையை கடப்பதன் முக்கிய நிகழ்வான மையப்பகுதி கரையை கடக்கும் நிகழ்வு தொடங்கியுள்ளது.
தென் கிழக்கு வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் வெளிப்பகுதி கரையை கடக்கும் நிகழ்வு இரவு சுமார் 9.45 மணி அளவில் தொடங்கியது. கடந்த 2 மணி நேரமாக புயலின் வெளிப்பகுதி கரையை கடந்து வந்த நிலையில் தற்போது கரையை கடக்கும் நிகழ்வின் முக்கிய நிகழ்வான மையப்பகுதி கரையை கடக்கும் ( இரவு சுமார் 11.45மணி நேரப்படி) நிகழ்வு தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அடுத்த 2 அல்லது 3 மணி நேரம் வரை கரையை கடக்கும் நிகழ்வு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் கூறினார். மையப்பகுதி கரையை கடக்கும்போது மணிக்கு 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் அவர் கூறினார்.
புயல் எதிரொலியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் 97 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. காட்டுப்பாக்கத்தில் 112 மில்லி மீட்டர், மீனம்பாக்கத்தில் 77 மில்லி மீட்டர் திருவள்ளூர் 57 மில்லி மீட்டர், மாதவரம் 78 மில்லி மீட்டர். மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.