மாண்டஸ் புயல் அச்சுறுத்தல் எதிரொலியாக பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் அவசர உதவிகளுக்கு தொடர்புகொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்டி அவசர உதவிக்கு 1913 என்ற எண்ணிலும் 044- 25619206, 044-25619207, 044-25619208 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை போக்குவரத்து துறை சார்பில் 90031 30103 என்ற அவசர உதவி எண் வெளியிடப்பட்டு உள்ளது.
மின்சாரத்துறை தொடர்பான அவசர உதவிக்கு 24 மணி நேர அழைப்பு எண் 9498794987-ஐ தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.







